Thursday, December 28, 2006

பிரசவம் சிரமம், பிள்ளை நிறைவு

பிரசவம் சிரமம், பிள்ளை நிறை என்று ஊரில ஒரு சொல்லாடல் உண்டு. இந்தபுதிய புளொக்கருக்கு மாறுவதற்கான பரிசோதனை முயற்சியில் எனக்கு அந்தச் சொல்லாடல்தான் நினைவுக்கு வந்தது.

ரமணி யின் அடிப்படையான ஒருவார்ப்புருவை எடுத்து, புதிய புளொக்கரின் உதவியுடன் வடிவத்தையும் வண்ணதையும் மாற்றியிருக்கின்றேன் உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது என்பதைச் சற்று அறியத்தாருங்களேன். எல்லா இணையஉலாவிகளிலும் சரிவரத் தெரிகிறதா என்பதையும் சற்று உறுதிப்படுத்துங்கள்.

நன்றி!

11 comments:

said...

வேர்கள் பக்கம் இருக்கும் அளவைச் சற்று அதிகரிக்கலாம். நல்ல நிறக் கலவை , ஆனால் தாத்தா வயசுக்காரருக்குக் கண் குத்துமோ தெரியவில்லை. ஆங்கிலத்தில் எஞ்சியிருக்கும் தலைப்புக்களையும் முடிந்தால் தமிழுக்கு மாற்றலாம். எங்களைப் போல ஆட்களுக்கு (உங்களையும் சேர்த்து தான்) மூன்று நிரலி சரி வராது, நிறைய எழுதவேணும் எண்டால் இரண்டு நிரலிக்கு மாற யோசிக்கலாம்.

said...

//ஆனால் தாத்தா வயசுக்காரருக்குக் கண் குத்துமோ தெரியவில்லை. //

அவரே தனக்குக் குத்தாமல் இருந்தபடியாத்தானே எடுத்துப் பாவிச்சிருக்கிறார்?
;-)

எனக்கும் மூண்டுநிரல் எண்டது ஒவ்வாதது. ஆனால் வாசிக்கிறதுக்கில்லை; எழுதிறதுக்குத்தான்.

said...

பிரபா! வசந்தன்!

உங்கள் அபிப்பிராயங்களுக்கு நன்றி.

//அவரே தனக்குக் குத்தாமல் இருந்தபடியாத்தானே எடுத்துப் பாவிச்சிருக்கிறார்?
;-)//
அடப்பாவி!..:)

said...

தாத்தா வயசா? தாதா வயசா?

வயாக்ரா என்று வாசிக்காமல் வயசா என்றே சரியாக வாசித்துக்கொள்ளவும் ;-)

said...

யாருக்கோ..குத்தினபடியால் தான் .எழுதியிருக்கினம்..... அது சரி...தாத்தா வயது... எத்தினையாவது வயதிலிருந்து ஆரம்பிக்குது.

said...

//யாருக்கோ..குத்தினபடியால் தான் .எழுதியிருக்கினம்..... //
சின்னக்குட்டியர், உங்களுக்குக் குத்திப்போட்டுது போலை. அதுதான் இப்படிக் குத்திக்குத்தி எழுதிறியள்:-))

மலைநாடான், ஒண்டுக்கும் யோசிக்காமல் கஷ்டப்பட்டுப் பெத்த பிள்ளையை நல்லா வளக்கப்பாருங்கோ:-))

said...

அனானி! சின்னக்குட்டி!கனக்ஸ்!

உங்கள் அன்புக்கு நன்றி.

யோகன்!
உங்கள் பின்னூட்டத்தை தவறுதலாக நத்தார் வாழ்த்துக்கள் பகுதியில் இட்டுவிட்டீர்கள். அது அந்தப்பகுதியில் வந்திருக்கிறது.
நன்றி!

said...

//ஆனால் தாத்தா வயசுக்காரருக்குக் கண் குத்துமோ தெரியவில்லை.//
எப்படி பிரபாவுக்குத் தாத்தா வயசா? அப்போ எங்களுக்கெல்லாம் கொள்ளுத் தாத்தா? :))))

said...

பொன்ஸ்!

வாங்கம்மா, வாங்க! என்னது....ம்..நல்லா இருங்க!:))

said...

மலைநாடர்!
என்ன???மாரி மழை போல் எல்லாம் வந்து விழுந்துகிடக்கிறது. இப்போ மேலும் தெளிவாக உள்ளது எழுத்துக்கள். எனக்கு வாசிக்கப் பிரச்சனையில்லை (தாத்தா வயது) அதால் சொன்னேன்.வேறு தாத்தாக்களின் அபிப்பிராயத்தையும் கேட்கவும். பிரச்சனை எல்லோரும் ஒத்துக்கொள்ளமாட்டாங்க!!தாத்தா என்பதை;.
யோகன் பாரிஸ்

said...

//என்ன???மாரி மழை போல் எல்லாம் வந்து விழுந்துகிடக்கிறது//

அதுதானே யோகன்!
எனக்கும் ஒரு மாதிரியாத்தான் கிடக்கு. புதிதுக்கு மாறுவதற்கு முன்னர் குமரன் எல்லாப்பதிவுகளையும் பார்த்துப் பின்னூட்டம் போட்டிருக்கிறார். அது எல்லாப்பதிவுகளையும் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கு.

உங்கள் அபிப்பிராயங்களுக்கு மிக்க நன்றி.