Tuesday, January 09, 2007

கிளியே கிளியே !



சென்றவாரத்தில் இளைய மகள் பாடசாலையில் தான் செய்த நாட்காட்டிக்கு வரைந்த, இப்படத்தைக் கொண்டு வந்த போது, எனக்கு இருவர் உடனடியாக ஞாபகத்துக் வந்தார்கள்.
ஒருவர் ஓவியர்: மார்க். மற்றையவர் அவரது மாணவன்: நிலாந்தன். இவர்களிருவரும் வரைந்த இதே பாணி ஒவியங்கள் பலவற்றை யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கின்றேன். பின்பு இத்தகைய வரைதல் பாணி ஓவியங்களைக் காணவில்லை. இவ் ஓவியத்தைப் பாரத்த போது, மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

10 comments:

said...

உங்கள் மகளின் கற்பனை வளம் அருமை. அவளுக்கு வாழ்த்துக்கள்.

said...

மலைநாடர்!
மிக அருமை! கண்ணில் உயிர் தெரிகிறது.கோட்டோவியத்தில் புள்ளிகளும்;சதுரங்களும் மிக அழகு சேர்க்கின்றன;
மிகுந்த பாராட்டுக்கள்.சுவிஸ் பறவையினங்களை இப்படி ஓவியமாக்கி போடவும்.
யோகன் பாரிஸ்

said...

சேதுக்கரசி!

முதல் முறையாக எங்கள் வலைப்பதிவுக்கு வந்திருக்கின்றீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் பாராட்டுதல்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

said...

//சுவிஸ் பறவையினங்களை இப்படி ஓவியமாக்கி போடவும்.//

யோகன்!

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்லியுள்ள யோசனையை மகளிடம் கூறுகின்றேன். அவர்தான் மனசு வைக்க வேண்டும்.:)

said...

மிக நன்றாக இருக்கிறது மலைநாடான். நானும் அலுவலகத்தில் வேலை செய்ய மனமில்லாத நேரங்களில் இப்படி கட்டம் சதுரம் கோடுகள் என்று கிறுக்குவதுண்டு. ஆனால் எதுவும் ஒரு உருவமாக இருந்ததில்லை. மாடர்ன் ஆர்ட் போலவே இருக்கும். உங்கள் மகள் வரைந்திருக்கும் இந்த ஓவியம் எனக்கு என் கிறுக்கல்களை நினைவுறுத்தினாலும் யோகன் ஐயா சொன்னது போல் உயிர் கண்களில் தெரியும் வண்ணம் இதுவரை வரைந்ததில்லை. மிக நன்றாக இருக்கிறது இந்தக் கிளி.

said...

மிக அருமை!

said...

நல்ல திறமைதான் தங்கள் மகளுக்கு. வாழ்த்துக்கள் மலைநாடான்.

said...

வளரும் பயிரை முளையில் தெரியும் ;-)

ஓவியர் மார்க்கு, என் பள்ளியின் சித்திர ஆசிரியராக இருந்தவர், அந்தக் கால அனுபவம் பற்ரிச் சொல்லுவேன்.

said...

குமரன்!

உங்கள் கிறக்கல்களுக்குள் கூட ஒரு ஓவியம் ஒளிந்திருக்கும். அது உங்கள் அப்போதைய மன நிலையை ஒத்ததாகக் கூடப் பெரும்பாலும் இருக்கலாம். :) இது நான் சொல்லவில்லை. ஆய்வாளர்கள் கூற்று.

மற்றும்படி எங்கள் செல்லக்கிளியின், இந்தக்கிளி எனக்கும் ரொம்பப் பிடித்தது. தங்கள் பாராட்டுக்கு நன்றி!.

said...

செல்வநாயகி!

தங்கள் பாராட்டுக்கு நன்றி.


இலவசக்கொத்தனார்!

தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.