Monday, September 18, 2006
Sunday, September 17, 2006
பர்த்திப்புரீசா

Posted by மலைநாடான் at 8:44 PM 11 comments
வணக்கம்!
வணக்கம் நண்பர்களே!
இந்தப்புதிய வலைப்பூவில், என்னுடன் இணைந்து என் பிள்ளைகள் மூவரும் பதிவிட வருகின்றார்கள். எனக்கு ஆர்வமான துறைகள் சிலவற்றில், என் பிள்ளைகளும் ஈடுபாட்டுடன் இருக்கின்றார்கள். மகன் புகைப்படம் பிடித்தலிலும், பெரியபெண், ஓவியம், கவிதை என்பவற்றிலும், சிறியபெண், ஓவியம் கைவினை என்பவற்றிலும், ஆர்வமாக உள்ளார்கள். அவர்களின் படைப்புக்களுடன், எனது கலை வடிவங்கள் சிலவும் பதிவேற்ற விழைகின்றோம். பார்த்துக் கருத்துச் சொல்லுங்கள்.

எங்கள் விபரம் பகுதியில் காணப்படும் இப்படத்தினை வரைந்தவள் என் இளைய மகள். ஒருநாள் பாடசாலையில் வரைந்து கொண்டு வந்தாள். பார்த்த மாத்திரத்தில், அதன் வண்ணமும், பொருளும் பிடித்திருந்தது.
ஆண்மாவானது, ஆணவம், கன்மம், மாயை, ஆகிய மும்மலங்களையும் விட்டு நீங்கி, இறைவனை சரணடைந்தால் வெற்றி பெறலாம் என்பதைச்சுட்டும் சின் முத்திரை அடையாளமிதுவென இந்துக்கள் சொல்வார்கள்.
மிகநன்று என்பதைக் குறிக்கும் அடையாளமாக, ஐரோப்பியர்கள் இவ் அடையாளத்தைச் சுட்டுவார்கள்.
Posted by மலைநாடான் at 4:05 PM 10 comments