இயற்கையின் வரைதல்
இயற்கையை மிஞ்சிய படைப்பாளி யார்?. அதன் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே, அதி அற்புதமான கலை நயமிக்கவை. நமக்குத்தான் பார்த்து ரசிக்க பக்குவமும், கூடவே நேரமும் தேவை.
என் மகன் எடுத்த படமிது. என்னவென்று ஊகிக்க முடிகிறதா?
இயற்கையை மிஞ்சிய படைப்பாளி யார்?. அதன் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே, அதி அற்புதமான கலை நயமிக்கவை. நமக்குத்தான் பார்த்து ரசிக்க பக்குவமும், கூடவே நேரமும் தேவை.
என் மகன் எடுத்த படமிது. என்னவென்று ஊகிக்க முடிகிறதா?
Posted by மலைநாடான் at 7:56 AM
10 comments:
மரவட்டை? சிகப்பு நிறத்தில் நீளமாக இருக்குமே, அந்த மரவட்டை...(அதைப் பென்சில் மரவட்டை என்று செல்லப் பெயரிட்டு அழைப்போம் நாங்கள்..)
ஏதோவொரு ஜந்துவின் நாக்கு???
சிறிய இலை....சரியா...குரோட்டன்ஸ் செடியாக இருக்கவேண்டும்...
படத்தைப் பெரிசாக்கிப் போடலாம். அல்லது பெருசாக்கிற வசதியையாவது தரலாமே?
//படத்தைப் பெரிசாக்கிப் போடலாம். அல்லது பெருசாக்கிற வசதியையாவது தரலாமே//
பெரிசாப்போட்டா ஏதோ பெரிசா கண்டுபிடிச்சிடுவீங்களாக்கும்:))
நெருப்பு சுவாலை
மலை நாடர்!
இது ஏதாவது பூவின் மகரந்தமா?,,
படம் out of focus இருக்கிறது.
சரியாகப் புரியவில்லை.
யோகன் பாரிஸ்
//இயற்கையை மிஞ்சிய படைப்பாளி யார்?. அதன் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே, அதி அற்புதமான கலை நயமிக்கவை. நமக்குத்தான் பார்த்து ரசிக்க பக்குவமும், கூடவே நேரமும் தேவை.
//
நண்பர்களே!
படத்தின் மேலே நான் எழுதிய வரிகளின் பொருள் உண்மையானது. ஆனால் படத்துக்குப் பொருத்தமற்றது. ஏனெனில் அதில் இற்கையும் செயற்கையும் கலந்து காணப்படுகிறது.
அல்ப்ஸ்சின் பசுமையான சாரல்களில் கால்நடைகளை மேயவிடும்போது, மெல்லிய நாடாவொன்றைக் குறிப்பிட்ட பிரதேசத்தைச் சுற்றிக்கட்டிவிடுவார்கள். கால் நடைகள் அந்தப்பகுதிக்குள்ளே நின்று மேயும். அப்படி ஒரு புல்வெளியில் கட்டப்பட்டிருந்த சிகப்பு வண்ணநாடாவின் ஒருபகுதி மட்டும்தெளிவாகத் தெரிய, மற்றைய பகுதிகள் அவுட்டோப் போக்கஸ் செய்து எடுக்கப்பட்டிருக்கிறது.
உங்கள் அனைவரது வருகைக்கு நன்றி. ஊகங்களிற்குப் பாராட்டுக்கள்.
பொன்ஸ்!
வாங்க. ரொம்ப பிசியோ? உங்கள் செல்ல மரவட்டையை நாங்களும் அப்படித்தான் அழைத்ததாக ஞாபகம்.
பிரபா!
வித்தியாசமாகத்தான் யோசித்திருருக்கிறீர்கள்.
செந்தழல் ரவி!
நீங்களும் புலிதான் . ...யோசிப்பதில் நண்பா :))
வன்னியன்!
சிறிதாகப் படம் போடுவதற்கான காரணத்தை தனிமடலிடும்போது சொல்கின்றேன்.
கனக்ஸ்!
நீங்களும் ஜோக்கடிப்பீங்களா?... சொல்லவேயில்ல..:)))
சின்னக்குட்டி!
நீங்கள் ஒரு தீப்பொறிதான்.
யோகன்!
எப்பவும் மெல்லிதயம்தான் உங்களுக்கு
நன்றி நண்பர்களே!
என்னால் ஊகிக்க முடியவில்லை ஐயா. பின்னூட்டங்களில் தெரிந்து கொண்டேன். :-)
Post a Comment