கொடியிடைப் பெண்டிர் போய் தடியுடற்பெண்டிர் வந்திட்டினமோ? ரெண்டுக்கும் ஏதாவது வித்தியாசமிருக்கோ? கொடியிடையாளால் அடிக்க முடியாது, அணைக்க மட்டுமே முடியும்; தடியுடலாளால் அடிக்க மட்டுமே முடியும் என்ற விளக்கத்தைக் கொடுக்கலாமா?
//தடியுடலாளால் அடிக்க மட்டுமே முடியும் என்ற விளக்கத்தைக் கொடுக்கலாமா?//
பெயரிலிகளே!
நானும் ஆடைவடிவமைப்புப் புத்தகங்கங்களிலெல்லாம் இப்படி மெலிதான பெண்களின் படங்களைத்தான் கண்டிருக்கின்றேன். அது என்ன விதியென்று தெரியவில்லை. அதெல்லாம் இருக்கட்டும், பெயரிலியின் மேலேயுள்ள கருத்துச் சரிபோல்தான் எனக்கும்படுகிறது. ஏதோ எனக்கு அடிவிழாமல் இருந்தால் சரி..:)
மலைநாடர்! நம் மக்கள்;டாக்டர்,இஞ்சினியர் தாண்டி வருவதையிட்டு மிகச் சந்தோசம்; உங்கள் மகள் தெரிவு செய்த துறை குறைந்ததல்ல....கிளிக்கானால்...புகழும் பணமும் கொட்டும்;;;நிற்க சமீப காலமான நாகரீக உடை அழகிகள் உலகில், 10 க்கு மேற்ப்பட்ட மரணம்;;200 பேர் வரை தீர்க்க முடியாத நோயுடன் வைத்தியசாலைக் கட்டில்களில் மரணத்தை ;எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அறிந்திருப்பீர்கள். சென்ற வாரமும் ஓர் 20 வயது பிறேசில் பெண் மரணம்.;;;இதைப் பற்றி இங்கே ஓர் விசேட ;நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். அதில் கூறப்பட்டவை....இப்பெண்களை 45 கிலோவுக்குக் கூட அனுமதிப்பதில்லை; அதனால் அவர்கள் சாப்பிடுவதில்லை. அதன் தாக்கம் குடல் சுருக்க நோய் தாக்கி, வலுவற்றவர்களாகி..;நோய் எதிர்ப்பற்று;;;மரணத்தைத் சொற்ப வயதில் தழுவுகிறார்கள். இதனால் வரும் காலங்களில் 55 - 60 கிலோவுடையோரே!!!இத்துறையுள் நுளையலாம். எனச் சட்டம் கொண்டுவர அரசாங்கம் திட்டம் போட்டுள்ளது.வரவேற்கத்தக்கது. அடுத்து.;;;கொடியுடலுக்கு மாத்திரமல்ல...தடி;;;ஏன் மர உடலுக்கும் இந்த;;;;துறையுண்டு. நான் பல தடவை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். மகளிடம் திறமையுண்டு. ஊக்கப் படுத்துங்கள்; அவரையும் நன்கு சாப்பிடச் சொல்லுங்கள். யோகன் பாரிஸ்
மலைநாடான் உருப்பருத்த பெண்களுக்கான உடைவிளம்பரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கியிருக்கின்றன. கிரிஸ்ரின் அலே என்ற நடிகை அந்நிலையைப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், அவருங்கூட, உடல்நிறை குறைக்கிறேன் என்பதைக் காட்ட ஆர்வமாகவுள்ளார். அண்மையிலே ஓப்ரா வின்ப்ரீ நிகழ்ச்சியிலே உடற்பருமன் குறைந்ததைச் சுட்டிக் காட்டி நீச்சலுடையுடன் தோன்றினார். உடல்நலன் குறித்து உடற்பருமன் கட்டாகவிருக்கத்தான் வேண்டும்; ஆனால், சூடானிலே பட்டினிச்சாவிலே இறப்பதாகக் காட்டும் பெண்களினைக் கண்ட அடுத்த நிமிடத்திலே சிறந்த உடலழகி உண்ணும் ஒழுங்கீனத்தினாலே பாதிக்கப்படுகிறாரென்று அதே எலும்புக்கூட்டுருவைக் காட்டும்போது, சீயென்று போகிறது.
உங்கள் கருத்துக்களை மகள் வாசித்தாள். நீங்கள் சொன்ன விடயங்களை அவளும் அறிந்தே வைத்திருந்தாள். அவள் சொல்லிய கருத்து, ஆடைவடிவமைப்புக்கான வரைபுகளை ஒரு அழகுக்காகவே மெல்லிய தோற்றத்தில் வரைவதே மரபாகிற்று. மேலும் ஆரம்ப முதலே உணவுப்பழக்கவழக்கத்தில் சீரான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் எந்தப் பெண்ணும், நோய்வாய்ப்பட்டதில்லை. ஆனால் சில வலுக்கட்டாய உடல் மெலிவுக்கு முயல்வோரே பலியாகிப் போகின்றார்கள். மற்றும்படி, பெயரிலியின் கருத்து சிந்திக்க் கூடியதே. தங்கள் கருத்துக்கு நன்றி.
முகமற்றவர்கள் பலர் இவ்வுலகில்,ஆயினும் அவர்கள் திறமைகள் முகம் காட்டும் போது உலகத்தின் முகமே வசீகரமாகின்றது.நான் பார்த்து ரசித்தது ஓவியத்தின் நேர்த்தியையும் உடல் வாகையுமே.உடையை அல்ல.ஆயினும் உங்கள் மகளின் சேவைக்காக உலகம் ஒரு நாள் ஏங்கி நிற்கும் என்பது முகமற்ற ஒருவனின் நம்பிக்கை வாக்கு.Bravo.Arrivederci.
14 comments:
நளினமென்று பார்க்க நன்றாகவிருக்கிறது. ஆனால், தடியுடற்பெண்டிருக்குமட்டுமா நளினவுடை? தடிப்பெண்டிருக்கும் வேண்டாமா? ;-)
கொடியிடைப் பெண்டிர் போய் தடியுடற்பெண்டிர் வந்திட்டினமோ?
ரெண்டுக்கும் ஏதாவது வித்தியாசமிருக்கோ?
கொடியிடையாளால் அடிக்க முடியாது, அணைக்க மட்டுமே முடியும்; தடியுடலாளால் அடிக்க மட்டுமே முடியும் என்ற விளக்கத்தைக் கொடுக்கலாமா?
பெயரிலியாக வருவதற்குச் சிறப்பாக ஏதும் காரணமில்லை.
//தடியுடலாளால் அடிக்க மட்டுமே முடியும் என்ற விளக்கத்தைக் கொடுக்கலாமா?//
பெயரிலிகளே!
நானும் ஆடைவடிவமைப்புப் புத்தகங்கங்களிலெல்லாம் இப்படி மெலிதான பெண்களின் படங்களைத்தான் கண்டிருக்கின்றேன். அது என்ன விதியென்று தெரியவில்லை. அதெல்லாம் இருக்கட்டும், பெயரிலியின் மேலேயுள்ள கருத்துச் சரிபோல்தான் எனக்கும்படுகிறது. ஏதோ எனக்கு அடிவிழாமல் இருந்தால் சரி..:)
மலைநாடர்!
நம் மக்கள்;டாக்டர்,இஞ்சினியர் தாண்டி வருவதையிட்டு மிகச் சந்தோசம்; உங்கள் மகள் தெரிவு செய்த துறை குறைந்ததல்ல....கிளிக்கானால்...புகழும் பணமும் கொட்டும்;;;நிற்க
சமீப காலமான நாகரீக உடை அழகிகள் உலகில், 10 க்கு மேற்ப்பட்ட மரணம்;;200 பேர் வரை தீர்க்க முடியாத நோயுடன் வைத்தியசாலைக் கட்டில்களில் மரணத்தை ;எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
சென்ற வாரமும் ஓர் 20 வயது பிறேசில் பெண் மரணம்.;;;இதைப் பற்றி இங்கே ஓர் விசேட ;நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள்.
அதில் கூறப்பட்டவை....இப்பெண்களை 45 கிலோவுக்குக் கூட அனுமதிப்பதில்லை; அதனால் அவர்கள் சாப்பிடுவதில்லை.
அதன் தாக்கம் குடல் சுருக்க நோய் தாக்கி, வலுவற்றவர்களாகி..;நோய் எதிர்ப்பற்று;;;மரணத்தைத் சொற்ப வயதில் தழுவுகிறார்கள்.
இதனால் வரும் காலங்களில் 55 - 60 கிலோவுடையோரே!!!இத்துறையுள் நுளையலாம். எனச் சட்டம் கொண்டுவர அரசாங்கம் திட்டம் போட்டுள்ளது.வரவேற்கத்தக்கது.
அடுத்து.;;;கொடியுடலுக்கு மாத்திரமல்ல...தடி;;;ஏன் மர உடலுக்கும் இந்த;;;;துறையுண்டு. நான் பல தடவை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.
மகளிடம் திறமையுண்டு. ஊக்கப் படுத்துங்கள்;
அவரையும் நன்கு சாப்பிடச் சொல்லுங்கள்.
யோகன் பாரிஸ்
மலைநாடான்
உருப்பருத்த பெண்களுக்கான உடைவிளம்பரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கியிருக்கின்றன. கிரிஸ்ரின் அலே என்ற நடிகை அந்நிலையைப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், அவருங்கூட, உடல்நிறை குறைக்கிறேன் என்பதைக் காட்ட ஆர்வமாகவுள்ளார். அண்மையிலே ஓப்ரா வின்ப்ரீ நிகழ்ச்சியிலே உடற்பருமன் குறைந்ததைச் சுட்டிக் காட்டி நீச்சலுடையுடன் தோன்றினார். உடல்நலன் குறித்து உடற்பருமன் கட்டாகவிருக்கத்தான் வேண்டும்; ஆனால், சூடானிலே பட்டினிச்சாவிலே இறப்பதாகக் காட்டும் பெண்களினைக் கண்ட அடுத்த நிமிடத்திலே சிறந்த உடலழகி உண்ணும் ஒழுங்கீனத்தினாலே பாதிக்கப்படுகிறாரென்று அதே எலும்புக்கூட்டுருவைக் காட்டும்போது, சீயென்று போகிறது.
யோகன்! பெயரிலி!
உங்கள் கருத்துக்களை மகள் வாசித்தாள். நீங்கள் சொன்ன விடயங்களை அவளும் அறிந்தே வைத்திருந்தாள். அவள் சொல்லிய கருத்து,
ஆடைவடிவமைப்புக்கான வரைபுகளை ஒரு அழகுக்காகவே மெல்லிய தோற்றத்தில் வரைவதே மரபாகிற்று. மேலும் ஆரம்ப முதலே உணவுப்பழக்கவழக்கத்தில் சீரான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் எந்தப் பெண்ணும், நோய்வாய்ப்பட்டதில்லை. ஆனால் சில வலுக்கட்டாய உடல் மெலிவுக்கு முயல்வோரே பலியாகிப் போகின்றார்கள்.
மற்றும்படி, பெயரிலியின் கருத்து சிந்திக்க் கூடியதே.
தங்கள் கருத்துக்கு நன்றி.
இந்தப் பெண் அணிந்திருக்கும் உடை எந்தக் கலாச்சாரத்தை சேர்ந்தது?
முகமற்றவர்கள் பலர் இவ்வுலகில்,ஆயினும் அவர்கள் திறமைகள் முகம் காட்டும் போது உலகத்தின் முகமே வசீகரமாகின்றது.நான் பார்த்து ரசித்தது ஓவியத்தின் நேர்த்தியையும் உடல் வாகையுமே.உடையை அல்ல.ஆயினும் உங்கள் மகளின் சேவைக்காக உலகம் ஒரு நாள் ஏங்கி நிற்கும் என்பது முகமற்ற ஒருவனின் நம்பிக்கை வாக்கு.Bravo.Arrivederci.
//நான் பார்த்து ரசித்தது ஓவியத்தின் நேர்த்தியையும் உடல் வாகையுமே.//
வெண்மதி!
இப்படத்தை நான் பதிவு செய்ததும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அதே காரணங்களுக்காககத்தான்.
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள்.
மலைநாடான்
மகளுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து விடுங்கள்.
மிக நேர்த்தியான வரைதல்
நவன்!
உண்மையில் உங்களுக்கு இது எந்தக் கலாச்சார உடையென்று தெரியவில்லையா?:)
சந்திரவதனா!
நலம்தானே? பாராட்டுக்களுக்கு நன்றி. உங்கள் பாராட்டுக்கள், நிச்சயம் அவர்களை ஊக்குவிக்கும்.
இல்லையே!
பரவாயில்லை. நான் சொல்வது சரியா என்று சொல்லுங்கள்.
switzerland.
மலைநாடரே! தங்கள் மகளின் ஓவியத்தைப் பற்றி மட்டுமே கருத்து சொல்ல வந்தேன். பின்னூட்டங்களிலும் சுவையான கருத்துகள் இருக்கின்றன. :-)
ஓவியம் நன்றாக இருக்கிறது. பின்னல சடையை பின்பக்கம் பார்த்திருக்கிறேன். இந்தப் பெண் முன்னால் அணிந்திருக்கிறாள். :-)
சிலர் சொன்னது போல் உடல்வாகு தான் மிக மிக மெல்லிதாக இருக்கிறது. ஆனால் மேற்கத்திய உலகில் அப்படி தானே இருக்கிறார்கள்.
ஒரு சோதனைப்பின்னூட்டம்
ஊரோடி பகீ
Post a Comment