Saturday, January 13, 2007

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !



நண்பர்களே!

அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல், தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!.

எங்கள் நிலத்தில், துயரம்பொங்கும் வாழ்வுச்சூழலில் சிக்கித்துயருறும், உறவுகள் வாழ்வில் இன்பம் பொங்கப் பிரார்த்திப்போம்.

Tuesday, January 09, 2007

கிளியே கிளியே !



சென்றவாரத்தில் இளைய மகள் பாடசாலையில் தான் செய்த நாட்காட்டிக்கு வரைந்த, இப்படத்தைக் கொண்டு வந்த போது, எனக்கு இருவர் உடனடியாக ஞாபகத்துக் வந்தார்கள்.
ஒருவர் ஓவியர்: மார்க். மற்றையவர் அவரது மாணவன்: நிலாந்தன். இவர்களிருவரும் வரைந்த இதே பாணி ஒவியங்கள் பலவற்றை யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கின்றேன். பின்பு இத்தகைய வரைதல் பாணி ஓவியங்களைக் காணவில்லை. இவ் ஓவியத்தைப் பாரத்த போது, மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

Thursday, January 04, 2007

இவரு எப்ப இதுக்கு மாறினாரு?



அடடா? இவரு எப்ப இதுக்கு மாறினாரு?.. கூகிள் ஆண்டவரிடம் ஏதோ தேடப்போக இவரு வந்து சிக்கிக்கிட்டாரு. ஆனா அட்காசமாத்தான் இதிலயும் இருக்காரு இல்ல?

Wednesday, January 03, 2007

2006 ம் ஆண்டின் சிறந்த..


ஈராக்கிலிருந்து வெளியேறும் வழி


பாப்பரசரின் முஸ்லீம்கள் தொடர்பான சர்ச்சை



சிடானின் உலகக் கோப்பை போட்டி மோதல்

ஈரானின் அணுவாயுதப் பரீட்சார்த்தம்

ஆகியன குறித்த கருத்துப்படங்கள் இவை. இப்படங்கள் உலகின் பலநாடுகளிலிருந்தும் வரையப்பட்டவை. படங்களின் கீழ்பகுதியில் அவை வெளியான அல்லது வரையப்பட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. 2006 ம் ஆண்டின் சிறந்த கேலிச்சித்திரங்கள் எனத் தெரிவு செய்து தொகுத்து, சுவிஸ் பத்திரிகையொன்றில் வந்தவற்றிலிருந்து நாங்கள் ரசித்த சில படங்களை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.