Sunday, September 17, 2006

வணக்கம்!

வணக்கம் நண்பர்களே!

இந்தப்புதிய வலைப்பூவில், என்னுடன் இணைந்து என் பிள்ளைகள் மூவரும் பதிவிட வருகின்றார்கள். எனக்கு ஆர்வமான துறைகள் சிலவற்றில், என் பிள்ளைகளும் ஈடுபாட்டுடன் இருக்கின்றார்கள். மகன் புகைப்படம் பிடித்தலிலும், பெரியபெண், ஓவியம், கவிதை என்பவற்றிலும், சிறியபெண், ஓவியம் கைவினை என்பவற்றிலும், ஆர்வமாக உள்ளார்கள். அவர்களின் படைப்புக்களுடன், எனது கலை வடிவங்கள் சிலவும் பதிவேற்ற விழைகின்றோம். பார்த்துக் கருத்துச் சொல்லுங்கள்.


Photobucket - Video and Image Hosting

எங்கள் விபரம் பகுதியில் காணப்படும் இப்படத்தினை வரைந்தவள் என் இளைய மகள். ஒருநாள் பாடசாலையில் வரைந்து கொண்டு வந்தாள். பார்த்த மாத்திரத்தில், அதன் வண்ணமும், பொருளும் பிடித்திருந்தது.

ஆண்மாவானது, ஆணவம், கன்மம், மாயை, ஆகிய மும்மலங்களையும் விட்டு நீங்கி, இறைவனை சரணடைந்தால் வெற்றி பெறலாம் என்பதைச்சுட்டும் சின் முத்திரை அடையாளமிதுவென இந்துக்கள் சொல்வார்கள்.

மிகநன்று என்பதைக் குறிக்கும் அடையாளமாக, ஐரோப்பியர்கள் இவ் அடையாளத்தைச் சுட்டுவார்கள்.

10 comments:

said...

நல்ல முயற்சி மலைநாடான்.
உங்கள் பிள்ளைகளின் கலைத்திறனையும் இங்கு காண்பிப்பது நல்ல விடயமே.
ஒரு தொகுப்பாகவும் இருக்கும். பக்க வடிவமைப்பும் கலைக்கேற்ப பொருத்தமாக அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

said...

அண்ணே,
நல்ல குடும்ப முயற்சி.

ஆ'ன்'மாவுக்கு பால்பேதம் பண்ணிவிட்டீர்களே?
தமிழ் கற்றுத் தந்த தமிழாசிரியர்கள் சரியாகக் கற்றுத் தரவில்லையோ?

;-)

said...

பெயரிலி!

எல்லாப்பாடத்துக்கும் 'ஏ' எடுத்த நீங்கள்தான் பிழைவிடக்கூடாது.

கந்தையா ரீச்சற்ற தமிழ்வகுப்புக்கு 'கட்' அடிச்சுப்போட்டு களவாக் கடல் குளிக்கப்போன பலன், குத்து மதிப்பில போட்டு இப்பிடிக் குட்டுப்பட வேண்டிக்கிடக்கு.

சரி சரி நடந்ததது நடந்து போச்சு, ஆனா கந்தையாரீச்சரட்ட மட்டும் போட்டுக் குடுத்திடாதையும். விசயம் எங்களோட இருக்கட்டும்.

said...

மலை நாடர்!
தங்கள் பிள்ளைகள் திறமையையும்; பார்வைக்கு வைத்ததற்கு நன்றி! கட்டாயம் ஊக்குவிக்கவும். எண்ணச்சிதறலை மாற்ற இவை உன்னத மருந்து.
யோகன் பாரிஸ்

said...

யோகன்!

உங்கள் ஊக்குவிப்புக்கும். உளமார்ந்த கருத்துக்களுக்கும் நன்றி

said...

சந்திரவதனா!

உங்களைப்போன்ற நண்பர்களின் ஊக்குவிப்பே இத்தகைய செயற்பாடு. மற்றும்படி நான் படு சோம்பேறி.

நன்றி!

said...

நல்ல முயற்சி மலைநாடான்.

said...

வணக்கம் ..மலைநாடன்... நல்ல முயற்ச்சி....தொடருங்கள்

said...

செல்வநாயகி! சின்னக்குட்டி!

உங்கள் வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றிகள்.

said...

உண்மை மலைநாடர். இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் நானும் சின்முத்திரையையும் நன்று நன்று என்று பாராட்டும் முத்திரையையும் நினைத்துக் கொள்வேன்.