Tuesday, November 06, 2007

இப்படி இருந்த நான்...

zucchine என்று அழைக்கப்படும் வெள்ளரிக்காய்களை இதுவரை நாளும் முதற்படத்திலுள்ளதுபோல், பச்சைநிறக் காய்களாகத்தான் கண்டிருக்கின்றேன். முதற்தடவையாக அவற்றை வெள்ளை, மஞ்சள், நிறங்களிலும், உருண்டை வடிவிலும், இன்றுதான் பார்த்தேன்.


இப்படி இருந்த நான்..
இப்படி
இப்படி..
ஆயிட்டேன்

14 comments:

said...

இங்கே ஒரு வித பர்ப்பிள் கலரிலும் கிடைக்குது.

குடைமிளகாயும் கலர்கலரா ஆரஞ்சு. சிகப்பு,பச்சை, பர்ப்பிள்ன்னு ஜமாய்க்குதுங்க.

said...

அது Zucchini. கொஞ்சம் சரி பண்ணிடுங்க.

said...

காலத்தின் வளர்ச்சி - மாற்றங்களைக் கொண்டு வரத்தான் செய்யும்.

said...

மலைநாடர்!
இவை வெள்ளரிக்காயா?? கருக்குப்பிசுக்கின் ஒரு வகையா???
வெள்ளரிப்பழம் சமைப்பதில்லை.
அதற்குச் சீனி போட்டுச் சாப்பிடலாம்.
பனை ஓலையில் கட்டிச் சந்தைக்கு வரும். வாசம் தூக்கலாக இருக்கும்
பழமானதும் வெடிக்கும் அளவிலும் பெரிது.
'வெள்ளரிப்பழம் பிளந்த முல்லைச் சிரிப்பு 'எனச் சினிமாப் பாடல் உண்டு.
இப்படி பல நிறத்தில் சந்தையில் கண்டேன்.
இந்த உருண்டை சுவையில் சற்று வித்தியாசம்.
நான் கத்தரிப்பூ நிறத்தில் கோவாப்பூக் கண்டேன்.
படமெடுக்கக் கருவியில்லை.
கணனி பலநாள் கைகாட்டிப் போட்டுது...

said...

இதைப் 'பாற்பிசுக்கு'என்பதாக ஞாபகம்.
இங்கே கூர்சற் என்பார்கள்.

said...

இதை சிறுதுண்டுகளாக் பொரித்து குளம்பு கறி வைக்கலாம்.குறிப்பு:-
கத்தரி குளம்பு வைக்கும் முறையே!

said...

இதை சீமைச் சுரக்காய் என்றும் சொல்லப்படுவதுண்டு என நினைக்கிறேன்

said...

இது பிசுக்கு எனும் Zucchini. வெள்ளரிக்காய் அல்ல

said...

இலவசக் கொத்தனார்,இந்தச் சுக்கினீயின் எழுத்துக்கு மூன்று வகைகளில் எழுதலாம் கண்டியளோ!

ஒன்று: மலைநாடன் எழுதியதைப்போன்று,Zucchine.

மற்றது,நீங்கள் குறிப்பிட்டபடி.

இதுவே, பொதுவான பாவனையில்(Deutschen Umgang Sprache)"Zucchini".

அடுத்து,Zucchetto,zucchino,Zucchini.Gemuese,Kuerbisart!இவைகளெல்லாம் அந்நிய மொழிவழிவந்த(கிரேக்க மற்றும் ஸ்பானிய) டொச்ச பெயர்ச்சொல்லாக மாறியது.

இதுள் எல்லாமே சரியானதுதாம்.

பூசினிக்காய்க் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பூசினி இனத்தைப் பூசினிக்காய் ஆக்குவதுபோன்றே ஆக்க வேண்டும்.அங்ஙனம் சமைத்தெடுக்கும்போது,அது நமது பூசினிக்காயைவிடச் சுவையாகவே இருக்கிறது.அதிகம் இறைச்சி உண்பவர்கள்,கிழமைகளில் இரண்டுதரம் சுக்கீனி ஆக்கியுண்டால் கொலஸ்திரீன் வகையறாக்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டென்பார்.

said...

எனது வீட்டுத்தோட்டத்தில் போன வருடமே நட்டுப்பார்த்தேன். நல்ல அறுவடை. இந்த ஆண்டு மஞ்சள் கரட்டும் கத்தரிப்பூநிற போஞ்சியும் நட்டேன். கரட் பெரிதாக அறுவடையை தரவில்லை. போஞ்சி நல்ல அறுவடை. சுவையில் பெரிதாக மாற்றம் இல்லை. நிறம் தான் மாற்றம்.

said...

வாங்க டீச்சர்!
முதல்ல வரவுக்கு நன்றி.

சும்மா எடுத்போட்ட பீர்க்கங்காய் படத்துக்கு பத்துப்பின்னூட்டம். சும்மா சொன்னாங்க உங்கள பின்னூட்ட நாயகின்னு. நல்ல பின்னூட்ட ராசி உங்களுக்கு.:))

குடைமிளகாய், உருளைக்கிழங்கு,பீர்க்கங்காய்,கூட கலர் மாறிடுதுங்க. நாம மட்டும் மாற முடியாமல் கிடக்கு.:(

said...

கொத்தனார்!

உங்க திருத்தத்துக்கு, பின்னாடி அனானி நண்பர் ஒருத்தரும் கனக்க விளக்கம் சொல்லியிருக்கிறார்.

இத்தாலிய மொழியில் இது ஒரு பெண்பால் பெயர்ச்சொல். ஒருமையில் Zucchina என வருவது, பன்மையில் Zucchine என்றாகும். மற்றொரு வகையில் நீங்கள் சொல்வதும் சரியே.

இன்னுமொரு கூடுதல் தகவல். சுவிஸிலுள்ள இத்தாலி மொழி பேசும் தென்மாநில மக்கள், ஜேர்மன் மொழிபேசும் வட மாநிலத்தவரை Zucchini என அழைப்பார்களாம்(யாழ்ப்பாணத்தவரை பனங்கொட்டைகள் என பிறர் விழிப்பது போல) :)

பகிர்வுக்கு நன்றி.

said...

சீனா!

உங்கள் கருத்து ஏற்புடையதே. ரசனைக்கான இத்தயை மாற்றங்களும் வரவேற்புக்குரியதே.
நன்றி.

said...

யோகன்!

இந்தப் பிசுக்கு, பீர்க்கிலிருந்து வந்ததுவே. ஈழத்தில் இது சமைப்பதிலும் பார்க்க விளையாட்டுக்கும், உடம்பு தேய்க்கப் பயன் பட்டதென்பதும் சரியே. ஆனால் சில ஏழைபாழைகளின் வீட்டில்,இலவச வேலி விநியோகமாகக் கிடைக்குமிவை, சுவையான பால்க்கறியாகப் பசி தீர்க்கும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அழகுக்க குறிப்புத் தருபவர்களின் சொல்லழகில் இது வெள்ளரிக்காயாக வந்த மயக்கத்தில் எனது இடுகையில் வெள்ளரிக்காயென்டு எழுதிவிட்டேன். அதற்காக ஒரு விசாரணைக் கமிட்டி வைத்து கூட்டம் கூடிநிக்கிறியள்.:)

இதெல்லாம் ரொம்ப ஓவர்:)

ஆனா பல தகல்வகள் கிடைத்தன என்பது உண்மை.