Monday, December 31, 2007
Friday, December 07, 2007
Thursday, November 29, 2007
கார்மையின் வெறுமை.
நீல வண்ணத்தின் பண்பை வரைந்திருக்கின்றேன் என்றாள், வரைந்த என் மூத்தமகள். என் பார்வையில் கார்மையின் வெறுமையெனும் தலைப்பு. உங்களுக்குத் தோன்றுவதையும் சொல்லுங்களேன்.
Posted by மலைநாடான் at 11:45 AM 1 comments
Labels: ஓவியம்
Tuesday, November 06, 2007
இப்படி இருந்த நான்...
zucchine என்று அழைக்கப்படும் வெள்ளரிக்காய்களை இதுவரை நாளும் முதற்படத்திலுள்ளதுபோல், பச்சைநிறக் காய்களாகத்தான் கண்டிருக்கின்றேன். முதற்தடவையாக அவற்றை வெள்ளை, மஞ்சள், நிறங்களிலும், உருண்டை வடிவிலும், இன்றுதான் பார்த்தேன். இப்படி இருந்த நான்..
இப்படி
இப்படி..
ஆயிட்டேன்
Posted by மலைநாடான் at 10:52 PM 14 comments
Labels: ஒளிப்படம், சும்மா சுட்டது
Thursday, July 26, 2007
இந்த ஓவியங்கள், அதனால், அதற்காக.
இந்தக் கணனி ஓவியங்கள் வரையப்படுவதற்கான காரணம் சிந்தாநதியுமல்ல, அவர் நடாத்தும் கணனி ஓவியப்போட்டியுமல்ல. இவை அப்போட்டிக்கானவையுமல்ல. அப்படியென்றால், எதனால், எதற்காகக ? அதனால் அதற்காக....புரிகிறதா?
Posted by மலைநாடான் at 11:54 PM 8 comments
Labels: ஓவியம், கருத்துச்சித்திரங்கள்
Tuesday, May 22, 2007
மலை அளைதல்
சிறு வயதில் நாங்கள் மண் அளைந்து விளையாடினோம். இவர்கள் மலை அளைந்து விளையாடுகின்றார்கள். பதிவின் பின்னால் மகன், முன்னால் அவனது நண்பர்கள்.
Posted by மலைநாடான் at 12:04 AM 7 comments
Labels: ஒளிப்படம்
Saturday, May 19, 2007
Friday, May 18, 2007
நீரின் நடனமும், நீருள் நடனமும்.
இந்தவாரம் பாடசாலைச் சுற்றுலா சென்று வந்த என் இளையசெல்வி, கண்டும், காணவும், பதிவு செய்தவை.
Posted by மலைநாடான் at 12:24 AM 4 comments
Labels: ஒளிப்படம்
Monday, May 07, 2007
அன்றும் இன்றும்
சென்றவாரத்தில் சுவிற்சர்லாந்தில், பழமையை நினைவுகூரும் ஒரு சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில் பழங்கால குதிரை வண்டிகளின் சவாரியும், அவற்றை ஓட்டுபவர்கள் அதே கால உடைகளிலும், தோன்றினார்கள். போட்டியின் நடுவர்களும், அதே கால ஆடையலங்காரத்தில் காணப்பட்டார்கள். இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கு உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளராக மகன் கலந்துகொண்டபோது, எடுத்த படங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக..
Posted by மலைநாடான் at 12:34 AM 4 comments
Labels: ஒளிப்படம்
Saturday, April 14, 2007
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நண்பர்களே!
அனைவர்க்கும் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Posted by மலைநாடான் at 1:35 PM 5 comments
Labels: வாழ்த்துக்கள்
Tuesday, April 03, 2007
Monday, March 26, 2007
கோடுகளும், வண்ணங்களும்.
இது எனக்கு மின்மடலில் ஒரு சிறுமி அனுப்பி வைத்த படம். அதனோடு ஒரு வலைப்பதிவு முகவரியும் இருந்தது. சென்று பார்த்தேன். சில படைப்புக்களும் இருந்தது. நீங்களும் சென்று பாருங்களேன். ஏதும் சொல்வதாயிருந்தால் , அவளது பதிவிலேயே சொல்லிவிடுங்கள். உற்சாகமடைவாள்.
Posted by மலைநாடான் at 11:59 PM 0 comments
Labels: ஓவியம்
Thursday, March 08, 2007
மகளிருக்கென்றொரு தினமாமே ?
மகளிருக்கென்றொரு தினமாமே? . முதலில் மனுசிகளாய் எங்களைப் பார்க்கட்டுமே !
எண்ணமும் வண்ணமும், என் பெரிய பெண்ணினுடையது.
Posted by மலைநாடான் at 8:51 PM 3 comments
Labels: ஓவியம்.
Saturday, January 13, 2007
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !
நண்பர்களே!
அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல், தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!.
எங்கள் நிலத்தில், துயரம்பொங்கும் வாழ்வுச்சூழலில் சிக்கித்துயருறும், உறவுகள் வாழ்வில் இன்பம் பொங்கப் பிரார்த்திப்போம்.
Posted by மலைநாடான் at 6:29 PM 2 comments
Labels: வாழ்த்துக்கள்
Tuesday, January 09, 2007
கிளியே கிளியே !
சென்றவாரத்தில் இளைய மகள் பாடசாலையில் தான் செய்த நாட்காட்டிக்கு வரைந்த, இப்படத்தைக் கொண்டு வந்த போது, எனக்கு இருவர் உடனடியாக ஞாபகத்துக் வந்தார்கள்.
ஒருவர் ஓவியர்: மார்க். மற்றையவர் அவரது மாணவன்: நிலாந்தன். இவர்களிருவரும் வரைந்த இதே பாணி ஒவியங்கள் பலவற்றை யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கின்றேன். பின்பு இத்தகைய வரைதல் பாணி ஓவியங்களைக் காணவில்லை. இவ் ஓவியத்தைப் பாரத்த போது, மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
Posted by மலைநாடான் at 12:18 AM 10 comments
Labels: ஓவியம்
Thursday, January 04, 2007
இவரு எப்ப இதுக்கு மாறினாரு?
அடடா? இவரு எப்ப இதுக்கு மாறினாரு?.. கூகிள் ஆண்டவரிடம் ஏதோ தேடப்போக இவரு வந்து சிக்கிக்கிட்டாரு. ஆனா அட்காசமாத்தான் இதிலயும் இருக்காரு இல்ல?
Posted by மலைநாடான் at 10:49 PM 12 comments
Labels: சும்மா சுட்டது
Wednesday, January 03, 2007
2006 ம் ஆண்டின் சிறந்த..
ஈராக்கிலிருந்து வெளியேறும் வழி
பாப்பரசரின் முஸ்லீம்கள் தொடர்பான சர்ச்சை
சிடானின் உலகக் கோப்பை போட்டி மோதல்
ஈரானின் அணுவாயுதப் பரீட்சார்த்தம்
ஆகியன குறித்த கருத்துப்படங்கள் இவை. இப்படங்கள் உலகின் பலநாடுகளிலிருந்தும் வரையப்பட்டவை. படங்களின் கீழ்பகுதியில் அவை வெளியான அல்லது வரையப்பட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. 2006 ம் ஆண்டின் சிறந்த கேலிச்சித்திரங்கள் எனத் தெரிவு செய்து தொகுத்து, சுவிஸ் பத்திரிகையொன்றில் வந்தவற்றிலிருந்து நாங்கள் ரசித்த சில படங்களை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.
Posted by மலைநாடான் at 4:33 PM 7 comments
Labels: கருத்துச்சித்திரங்கள்