Monday, March 26, 2007

கோடுகளும், வண்ணங்களும்.


இது எனக்கு மின்மடலில் ஒரு சிறுமி அனுப்பி வைத்த படம். அதனோடு ஒரு வலைப்பதிவு முகவரியும் இருந்தது. சென்று பார்த்தேன். சில படைப்புக்களும் இருந்தது. நீங்களும் சென்று பாருங்களேன். ஏதும் சொல்வதாயிருந்தால் , அவளது பதிவிலேயே சொல்லிவிடுங்கள். உற்சாகமடைவாள்.

Thursday, March 08, 2007

மகளிருக்கென்றொரு தினமாமே ?


மகளிருக்கென்றொரு தினமாமே? . முதலில் மனுசிகளாய் எங்களைப் பார்க்கட்டுமே !

எண்ணமும் வண்ணமும், என் பெரிய பெண்ணினுடையது.

Saturday, January 13, 2007

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !



நண்பர்களே!

அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல், தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!.

எங்கள் நிலத்தில், துயரம்பொங்கும் வாழ்வுச்சூழலில் சிக்கித்துயருறும், உறவுகள் வாழ்வில் இன்பம் பொங்கப் பிரார்த்திப்போம்.

Tuesday, January 09, 2007

கிளியே கிளியே !



சென்றவாரத்தில் இளைய மகள் பாடசாலையில் தான் செய்த நாட்காட்டிக்கு வரைந்த, இப்படத்தைக் கொண்டு வந்த போது, எனக்கு இருவர் உடனடியாக ஞாபகத்துக் வந்தார்கள்.
ஒருவர் ஓவியர்: மார்க். மற்றையவர் அவரது மாணவன்: நிலாந்தன். இவர்களிருவரும் வரைந்த இதே பாணி ஒவியங்கள் பலவற்றை யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கின்றேன். பின்பு இத்தகைய வரைதல் பாணி ஓவியங்களைக் காணவில்லை. இவ் ஓவியத்தைப் பாரத்த போது, மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

Thursday, January 04, 2007

இவரு எப்ப இதுக்கு மாறினாரு?



அடடா? இவரு எப்ப இதுக்கு மாறினாரு?.. கூகிள் ஆண்டவரிடம் ஏதோ தேடப்போக இவரு வந்து சிக்கிக்கிட்டாரு. ஆனா அட்காசமாத்தான் இதிலயும் இருக்காரு இல்ல?

Wednesday, January 03, 2007

2006 ம் ஆண்டின் சிறந்த..


ஈராக்கிலிருந்து வெளியேறும் வழி


பாப்பரசரின் முஸ்லீம்கள் தொடர்பான சர்ச்சை



சிடானின் உலகக் கோப்பை போட்டி மோதல்

ஈரானின் அணுவாயுதப் பரீட்சார்த்தம்

ஆகியன குறித்த கருத்துப்படங்கள் இவை. இப்படங்கள் உலகின் பலநாடுகளிலிருந்தும் வரையப்பட்டவை. படங்களின் கீழ்பகுதியில் அவை வெளியான அல்லது வரையப்பட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. 2006 ம் ஆண்டின் சிறந்த கேலிச்சித்திரங்கள் எனத் தெரிவு செய்து தொகுத்து, சுவிஸ் பத்திரிகையொன்றில் வந்தவற்றிலிருந்து நாங்கள் ரசித்த சில படங்களை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

Thursday, December 28, 2006

பிரசவம் சிரமம், பிள்ளை நிறைவு

பிரசவம் சிரமம், பிள்ளை நிறை என்று ஊரில ஒரு சொல்லாடல் உண்டு. இந்தபுதிய புளொக்கருக்கு மாறுவதற்கான பரிசோதனை முயற்சியில் எனக்கு அந்தச் சொல்லாடல்தான் நினைவுக்கு வந்தது.

ரமணி யின் அடிப்படையான ஒருவார்ப்புருவை எடுத்து, புதிய புளொக்கரின் உதவியுடன் வடிவத்தையும் வண்ணதையும் மாற்றியிருக்கின்றேன் உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது என்பதைச் சற்று அறியத்தாருங்களேன். எல்லா இணையஉலாவிகளிலும் சரிவரத் தெரிகிறதா என்பதையும் சற்று உறுதிப்படுத்துங்கள்.

நன்றி!

Monday, December 25, 2006

நத்தார் வாழ்த்துக்கள்!


இயேசு பாலனின் வருகையைப் போற்றி மகிழும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tuesday, November 28, 2006

பின்னல்

Monday, November 20, 2006

முகமற்றவள்.

பெயரற்றவளுக்கு அநாமிகா என்பது தெரியும். முகமற்றவளுக்கு..?

ஆடைவடிவமைப்புத்துறையில் உயர்கல்விபயிலும், என் பெரிய பெண் வரைந்தது. எப்படியிருக்கென்று சொல்லுங்கள்.

Thursday, November 16, 2006

மறைந்திருந்து பார்க்கும்..

மறைந்திருந்து பார்க்கும் - இம் மலர்களின்

மன்னவன் யாரோ ?

படப்பிடிப்பு:- மகன்

Friday, October 13, 2006

இயற்கையின் வரைதல்

இயற்கையை மிஞ்சிய படைப்பாளி யார்?. அதன் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே, அதி அற்புதமான கலை நயமிக்கவை. நமக்குத்தான் பார்த்து ரசிக்க பக்குவமும், கூடவே நேரமும் தேவை.



என் மகன் எடுத்த படமிது. என்னவென்று ஊகிக்க முடிகிறதா?

Monday, September 18, 2006

சூரிய சந்திரரோ ?

Sunday, September 17, 2006

தளிர் - துளிர்



என் மகன் பிடித்த படம் இது. துளிரின் துல்லியம், மனதுக்கு மகிழ்வாயிருந்தது.

இளம் பெண்.

Photobucket - Video and Image Hosting

என் பெரிய பெண்ணின் படைப்பு இது. ஓவியர் ஜோஷ்வாவின் படைப்பொன்றைப் பார்த்து வரைந்ததாகச் சொன்னாள்.

பர்த்திப்புரீசா

Photobucket - Video and Image Hosting
என் பிரியத்திற்குரிய நண்பர் ஒருவரின் வேண்டுகோளிற்கென நான் வடித்த இச்சிலை தற்போது அவரது வீட்டு வழிபாட்டறையில் இருக்கிறது.

வணக்கம்!

வணக்கம் நண்பர்களே!

இந்தப்புதிய வலைப்பூவில், என்னுடன் இணைந்து என் பிள்ளைகள் மூவரும் பதிவிட வருகின்றார்கள். எனக்கு ஆர்வமான துறைகள் சிலவற்றில், என் பிள்ளைகளும் ஈடுபாட்டுடன் இருக்கின்றார்கள். மகன் புகைப்படம் பிடித்தலிலும், பெரியபெண், ஓவியம், கவிதை என்பவற்றிலும், சிறியபெண், ஓவியம் கைவினை என்பவற்றிலும், ஆர்வமாக உள்ளார்கள். அவர்களின் படைப்புக்களுடன், எனது கலை வடிவங்கள் சிலவும் பதிவேற்ற விழைகின்றோம். பார்த்துக் கருத்துச் சொல்லுங்கள்.


Photobucket - Video and Image Hosting

எங்கள் விபரம் பகுதியில் காணப்படும் இப்படத்தினை வரைந்தவள் என் இளைய மகள். ஒருநாள் பாடசாலையில் வரைந்து கொண்டு வந்தாள். பார்த்த மாத்திரத்தில், அதன் வண்ணமும், பொருளும் பிடித்திருந்தது.

ஆண்மாவானது, ஆணவம், கன்மம், மாயை, ஆகிய மும்மலங்களையும் விட்டு நீங்கி, இறைவனை சரணடைந்தால் வெற்றி பெறலாம் என்பதைச்சுட்டும் சின் முத்திரை அடையாளமிதுவென இந்துக்கள் சொல்வார்கள்.

மிகநன்று என்பதைக் குறிக்கும் அடையாளமாக, ஐரோப்பியர்கள் இவ் அடையாளத்தைச் சுட்டுவார்கள்.